செங்கல்பட்டு வழித்தடத்தில் நாளை 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக செங்கல்பட்டு வழித்திடத்தில் ஜனவரி 31 ஞாயிற்றுக்கிழமை 17 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
எனினும் அன்றையதினம் சிங்கபெருமாள்கோவிலில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான விரிவான அறிவிப்பு, அட்டவணை ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளன.