டிக் டாக்கிற்கு டிக்..டிக்..டிக்… அமெரிக்கா அதிரடி.. ஆட்டைய போடுகிறது மைக்ரோசாப்ட்..

சீனாவை சேர்ந்த டிக் டாக் செயலி உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை ஹேக்கர்கள் மூலம் சீனா திருடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் செயல்பட்ட சீன தூதரகம் மூலம் சைபர் திருட்டு நடைபெற்றது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் உத்தரவின்பேரில் அந்த தூதரகம் மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க டிக்டாக் பிரபலங்கள்
அமெரிக்க டிக்டாக் பிரபலங்கள்

டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளை பயன்படுத்தும் அமெரிக்கர்களின் ஸ்மார்ட் போன்களில் ஊடுருவி அனைத்து தகவல்களையும் சீனா உருவி விடுகிறது என்று நீண்டகாலமாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், டிக் டாக் தொடர்பாக நிருபர்களிடம் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். “டிக் டாக் செயலியின் செயல்பாட்டை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அந்த செயலிக்கு தடை விதிக்கப்படலாம் அல்லது வேறு சில நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் தடை, அமெரிக்காவில் தடை விதிக்க திட்டம், ஐரோப்பிய நாடுகளில் சந்தேகம் என டிக் டாக் செயலி நிர்வாகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக்கின் எதிர்காலம் டிக், டிக், டிக்.. என்று கடைசி காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் டிக் டாக்கை விற்றுவிட அந்த செயலியின் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. டிக் டாக்கை ஆட்டைய போட மைக்ரோ சாப்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றன. கைமாறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *