அமெரிக்க அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் இந்தியர்கள்! என்ற தகவல் உலக நாடுகளை புருவங்களை உயரச் செய்துள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
துணை அதிபர் மைக் பென்ஸ் மீண்டும் துணை அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன், அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
அந்த கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தமிழக தலைநகர் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர்.
அவரது தாய் ஷியாமளா சென்னையை சேர்ந்தவர். தந்தை டொனால்டு ஹாரிஸ் கென்யாவை பூர்விகமாகக் கொண்டவர்.
கமலா ஹாரிஸின் தாய் மொழி தமிழ் என்பதால் நன்றாக தமிழ் பேசக்கூடியவர். அவரது உறவுகள் இன்றும் சென்னையில் வசித்து வருகின்றனர்.

அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களுக்கிடையே யூட்டா மாநிலத்தின் தலைநகரான சால்ட் லேக் சிட்டி நகரில் கடந்த வியாழக்கிழமை விவதாம் நடைபெற்றது.
இதில் ஆளும் குடியரசு கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் காரசாரமான விவாதம் நடத்தினர்.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
77 வயதாகும் அவரின் முதுமை காரணமாக துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மீது சற்று கவனம் கூடியுள்ளது.
வயதின் காரணமாகவோ மற்ற விளைவுகளாலோ அதிபருக்கு ஏதும் ஏற்பட்டால் உடனே துணை அதிபர், அதிபராக பதவியேற்பார்.
அதிபர் ட்ரம்பிடமிருந்து அமெரிக்காவை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் இடை நிலை அதிபராகவே நான் போட்டியிடுகிறேன் என பைடன் கூறி வருவதால், தனக்கு வாரிசாக பைடன் முடிவு செய்துள்ள கமலா மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளார்.
துணை அதிபர் வேட்பாளர் விவாதம் முழுவதும் கமலா ஹாரிஸின் கை ஓங்கியிருந்தது.
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனும் ஒரு வகையில் இந்தியாவுக்கு உறவுக்காரர்.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றபோது ஜோ பைடனின் மூதாதையர்கள் கிழக்கு இந்தியா நிறுவனத்தில் பணியாற்றினர்.
அப்போது ஜோ பைடனின் மூதாதையர் ஒருவர் இந்திய பெண்ணை திருமணம் செய்து இங்கேயே செட்டிலாகிவிட்டார். அவரது குடும்பத்தினர் இன்னும் பைடன் என்ற குடும்ப பெயரை பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் மும்பை, கொல்கத்தாவில் வசிக்கின்றனர்.
ஜனநாயக கட்சியின் அதிபர், துணை அதிபர் வேட்பாளர்கள் இந்தியர்களாகவே கருதப்படுகின்றனர்.
வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர்கல் வெற்றி பெற்றால் அது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.