வண்டலூர் பூங்கா நுழைவு கட்டணம் உயருகிறது
இந்த மாத தொடக்கத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு வெளியிட்டது. அப்போது வரும் 10-ம் தேதி வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வண்டலூர் பூங்காவை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. நுழைவு வாயில்களில் கிருமி நாசினி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நுழைவு கட்டணத்தை உயர்த்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது பெரியவர்களுக்கான கட்டணம் ரூ.75 ஆக உள்ளது. இதை 90 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல 5 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.35 ஆக இருந்தது. இதை ரூ.50 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.