வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணி 90% நிறைவு

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணி 90% நிறைவு பெற்றுள்ளது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ வழித்தடம் நீட்டிக்கப்படுகிறது. இந்த புதிய வழித்தடத்தில் ஜூன் மாதம் மெட்ரோ ரயில் சேவையை இயக்க திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா வைரஸால் எழுந்த அசாதார சூழ்நிலையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

கடந்த ஜூலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் டிசம்பரில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் இந்த வழித்தடத்தில் ஆய்வு செய்வார்.

ரும் ஜனவரி மாதத்துக்குள் வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *