சாத்தான்குளம் சம்பவம் விசிகவின் 5 கோரிக்கைகள்

சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ்,, அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்துக்கு நீதி கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளனின் வழிகாட்டுதலின்படி 5 கோரிக்கைகள் வலியுறுத்தி இணையவழி வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். பாலாஜி தலைமை வகித்தார்.

விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு செயலாளர் தேவராஜ், இஸ்லாமிய ஜனநாயக பேரவை செயலாளர் அப்துல் ரஹ்மான், வேளச்சேரி தொகுதிச் செயலாளர் இளையா, மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் சுகுனா, அரசியல் குழு தமிழேந்தி, தோழர் சுப்பன், வட்ட செயலாளர் பெருமாள், ஜெகன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

  1. உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணையே தொடர வேண்டும்.
  2. தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கான உத்தரவை இரத்து செய்ய வேண்டும்.
  3. வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றத்திற்கு உதவ அமிக்கஸ் குயரி (AMICUS CURIAE) என்கிற மூத்த வழக்கறிஞர் நியமணம் வேண்டும்.
  4. 113வது இந்திய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்த வேண்டும்.
    5.வழக்கு விசாரணை மூன்று மாதத்தில் முடித்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *