தமிழகத்தின் திருப்பூர் மாவட்ட வனப்பகுதியில் யானையை துன்புறுத்திய இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சேர்த்து யானையை துன்புறுத்தும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த இளைஞர்கள் யானை மீது கற்களை வீசியெறிவதும், நாய்கள் மூலம் துரத்துவதும் வீடியோவில் பதிவாகி உள்ளன.
தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக bனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி 3 இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.