தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ட்விட்டர் பதிவை அவரின் ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். துபாயில் பந்தாவாக கூலிங் கிளாஸ், கால் மேல் கால் போட்டு போஸ் கொடுத்திருக்கும் நடிகர் விஜயகாந்த், நான் நல்லா இருக்கேன் என ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் உயிரோடு இருந்தபோது மக்களின் ஆதரவோடு தேசிய முற்போக்கு திராவிட கட்சியை தைரியமாக நடிகர் விஜயகாந்த் தொடங்கினார். மக்களுடன்தான் கூட்டணி என அறிவித்த விஜயகாந்த் துணிச்சலுடன் தேர்தலைச் சந்தித்தார். ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு மாற்றாக நடிகர் விஜயகாந்த்தை மக்கள் பார்த்தால் தமிழகத்தில் தேமுதிகவுக்கு ஆதரவு கிடைத்தது. அதனால் எம்எல்ஏவான நடிகர் விஜயகாந்த், குறுகிய காலத்திலேயே எதிர்கட்சித் தலைவரானார். எதிர்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் இருந்தபோதிலும் முதல்வர் ஜெயலலிதாவை சட்டசபையிலேயே எதிர்த்து வாதம் செய்தார்.
தேமுதிகவின் அசூர வளர்ச்சி கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டன. ஏன், தேசிய கட்சியான பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவை கூட்டணியில் சேரக்க ஆர்வம் காட்டியது. அதனால் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மாறிய தேமுதிக எந்தளவுக்கு வளர்ச்சியடைந்ததோ அந்தளவுக்கு வீழ்ச்சியையும் சந்தித்தது. அதற்கு நடிகர் விஜயகாந்த்தின் உடல்நலக்குறைவே முக்கிய காரணம். தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்த்த விஜயகாந்த் உடல்நலம் குன்றியதால் அண்ணி என்று அன்போடு அழைக்கப்பட்ட அவரின் மனைவி பிரேமலதா, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அடுத்தடுத்து தேமுதிக எடுத்த சில முடிவுகள் அந்தக் கட்சியின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியது.
எம்எல்ஏக்கள் அணிமாறியது, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செல்லாததது போன்ற காரணங்களால் தேமுதிக தோல்விகளைச் சந்தித்தது. இந்தநிலையில் சிகிச்சைக்காக விஜயகாந்த் வெளிநாட்டிற்கு சென்றார். அதன்பிறகு தேர்தல் பிரசாரத்தை தவிர்த்தார். கட்சியில் முக்கிய முடிவு எடுக்கப்படும் கூட்டங்களில் மட்டுமே அவர் பங்கேற்றார். வீட்டில் இருந்தபடியே கட்சி பணிகளை கவனித்து வந்த விஜயகாந்த்தின் இடத்தை நிரப்ப பிரேமலதா, விஜயகாந்தின் மகன் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். ஆனாலும் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்தச் சமயத்தில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன் துபாய் சென்றார். நர்ஸ்கள் புடை சூழ ஷோபாவில் கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்திருக்கும் விஜயகாந்த், கூலிங் கிளாஸிம் போட்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த விஜயகாந்த், நான் நலமாக உள்ளோன். நான் நடித்த ‘சத்ரியன்’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் நர்ஸ் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் இது” என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் படத்தில் ரிமோட்டை கையில் வைத்தப்படி விஜயகாந்த் போஸ் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தை பார்த்த அவரின் ரசிகர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியடைந்ததோடு அதை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
#VijayakanthLatestNews #Satriyan #SatriyanMovie #vijayakanth #vijayakanthphoto #Vijayakanthtwiiter #Vijayakanthshockingnews #breakingNews #viralnews