நடிகை விஜய சாந்தி காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் விஜயசாந்தி. தல்லி தெலங்கானா என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் பின்னர் அந்த கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதன்பிறகு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் ஐக்கியமானார்.
ஆனால் தெலங்கானா ராஷ்டிர சமிதியில் இருந்தும் விலகிய விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜவில் அவர் இணைய உள்ளார். இன்று அவர் பாஜகவில் அதிகாரபூர்வமாக இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.