வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் ஜேபிசி.. வைரல் வீடியோ.. உண்மை என்ன?

வெள்ள நீரில் ஒரு கார் சிக்கிக் கொண்டுள்ளது. அந்த காரில் இருந்து 3 பேரை ஜேசிபி பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்துச் செல்கிறது.
இந்த வீடியோவை சத்தீஸ்கரின் பிலாஸ்பூரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி திபான்ஷு கப்ரா உள்பட பல்வேறு பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலிவுட், டோலிவுட், கோலிவுட் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் இந்தியர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்று அந்த வீடியோவின் அடிக்குறிப்பில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.


உண்மை என்னவென்றால் இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல. கடந்த 2019-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது. இதை ரஷ்ய தொலைக்காட்சியான ஆர்.டி. டிவி சேனல் வெளியிட்டிருக்கிறது. அந்த சேனலின் லோகோவும் வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. உங்கள் வாட்ஸ் அப்பிலோ, பேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ இந்த வீடியோ உலா வந்தால் உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *