தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் ஆகஸ்டில் தொடங்கி டிசம்பரில் நிறைவடையும். அரசு அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
தற்போதைய கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்த ஆண்டு நேரடியாக விண்ணப்பங்களை வழங்குவதை தவிர்த்து இணையம் வாயிலாக வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதன்படி வரும் செப்டம்பரில் இணையம் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.