ஜனவரி 20-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக வாக்காளர்பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ஒருங்கிணைந்த வரைவு பட்டியல் நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்படும். அன்றுமுதல் டிசம்பர் 15-ம் தேதி வரை பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
பெயர் சேர்த்தல், திருத்தம் தொடர்பாக மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி தீர்வு காணப்படும். ஜனவரி 20-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
www.nvsp.in இணையதளம் வாயிலாகவும் பெயர் சேர்ப்பு, நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம். VOTER HELP LINE என்ற செல்போன் செயலியையும் பயன்படுத்தலாம்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.