நவ. 21, 22, டிச. 12, 13-ல் வாக்காளர் முகாம்…

நவ. 21, 22, டிச. 12, 13-ல் வாக்காளர் முகாம்… நடைபெறும்  என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் காலம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நிறைவடைகிறது. இதையொட்டி மே மாதத்துக்கு முன்பாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். இதையொட்டி வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் இதுவரை 9.22 லட்சம் ேப்ர விண்ணப்பித்துள்ளனர். வரும் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் டிசம்பர் 15-ம் தேதி வரை பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன.

இதன் ஒரு பகுதியாக நவ. 21, 22, டிச. 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *