தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. நாளையும் முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 16-ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் தற்போது புதிதாக பெயர் சேர்ப்பு, திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நவ. 21, 22 மற்றும் டிச. 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதன்படி இன்று காலை 10 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் முகாம் தொடங்கியது. மாலை 5 மணி வரை முகாம் நடைபெற்றது. நாளையும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் முகாம்கள் நடைபெறுகின்றன.
இந்த முகாம்களில் வாக்காளர் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.