இரட்டை பதிவுகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்

இரட்டை பதிவுகள் இருந்தால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 

முன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

“ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் மாறி இருந்தால், இரட்டைப் பதிவுகள் இருந்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும். கொரோனாவால் உயிரிழந்தாலும், பொதுவாக உயிரிழந்தவர்களுக்கு உள்ள விதிகளின்படி விண்ணப்ப படிவம் 7 பெற்று பெயர் நீக்கப்படுகிறது. 

வரும் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில்55க்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது” என்று சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *