நவ. 16-ல் வரைவு வாக்காளர் பட்டியல்

நவ. 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

வரும் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதன்பின் டிசம்பர் 15-ம் தேதி வரை பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளன. 

இதன் ஒரு பகுதியாக நவம்பர் 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *