திருவள்ளூர் மாவட்டத்தில் 2,612 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் 2,612 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் 164 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பத்தூர் தொகுதியில் 23 பேர், ஆவடி, மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் தொகுதிகளில் தலா 20 பேர் களத்தில் உள்ளனர். 

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே பொருத்த முடியும். எனவே 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட 5 தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் இரு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

திருவள்ளூர் மாவட்டத்தில் 4,902 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 2,612 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க்பபடும். 606 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான பொன்னையா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *