போலீஸாருக்கு வார விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போலீஸாரின் பணிச்சுமை தொடர்பாக வழக்கறிஞர் புருஷோத்தமன் சென்னை ஐகோர்ட்டில் அண்மையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “அரசு ஊழியர்களுக்கு வாரந்தோறும் 2 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. போலீஸாருக்கு ஏன் சுழற்சி முறையில் ஒருநாள் விடுமுறை அளிக்கக்கூடாது” என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த பின்னணியில் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளார். “போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு சுழற்சி முறையில் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.