வாரிய உறுப்பினர் பதிவை புதுப்பிக்க விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உள்பட 14 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வாரிய உறுப்பினர்கள் இணைய வழியில் பதிவை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் 14 நல வாரியங்களில் பதிவு செய்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறும் உறுப்பினர்கள் தங்களது அடையாள அட்டையை புதுப்பிக்க, வாழ்நாள் சான்று வழங்க டிசம்பர் 31 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முடிவை தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.