வருமான வரித் துறையில் ஆட்சேர்ப்பா.. வதந்தி.. நம்பாதீங்க… என்று வருமான வரித் துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டல கூடுதல் ஆணையர் திவாகர் விளக்கம் அளித்துள்ளார்.
“வருமான வரித் துறையில் மேற்பார்வையாளர், தனிச்செயலர், ஆய்வாளர், உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. இதனை நம்ப வேண்டாம். அரசிதழ் பதிவு இல்லாத பணியிடங்கள் மத்திய பணியாளர் தேர்வாணையம் வாயிலாக மட்டுமே நடத்தப்படும். இதுபோன்ற போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆட்சேர்ப்பு தொடர்பான விவரங்களை மத்திய பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) இணையத்தில் தெரிந்து கொள்ளுங்கள்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.