வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை சேவை தொடக்கம்

வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியில் பண பரிவர்த்தனை சேவையை தொடங்க மத்திய அரசின் தேசிய பண பரிவர்த்தனை கழகம் கடந்த 5-ம் தேதி அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் பண பரிவர்த்தனை சேவை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. தற்போது 40 கோடி பயனாளர்களுக்கு மட்டுமே இச்சேவை வழங்கப்படுகிறது.

“160-க்கும் மேற்பட்ட வங்கிகளின் ஆதரவுடன் பணப் பரிவர்த்தனை சேவை செயல்பட உள்ளது. யுபிஐ-யை பயன்படுத்தி ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஜியோ மபமண்ட்ஸ் வங்கி ஆகியவற்றின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம்” என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *