தமிழகத்தில் 9, 11-ம் வகுப்புகள் திறக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் கடந்த 19-ம் தேதி 10, 12-ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களை மட்டுமே அமர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
கூடுதல் வகுப்பறைகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் செயல்படும் பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.