அரசு பள்ளிகளில் இப்போதைக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படாது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதமும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே பள்ளிகள் திறப்பு குறித்து அத்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.


“தமிழகத்தில் பள்ளிகளை திறப்பு குறித்து பெற்றோரின் கருத்துகளை கேட்டு முடிவு செய்யப்படும். பிளஸ் 1 சேர்க்கையை பத்தாம் வகுப்பு மதிப்பெண் முறையில் நடத்துவதா அல்லது கிரேடு முறையில் நடத்துவதா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இப்போதைக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படாது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *