பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் ஜூலை 8-ம் தேதி வெளியாகலாம் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் கூறுகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பிறகே தேர்வு முடிவை வெளியிடுவது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


பிளஸ் 2 தேர்வு நடைபெற்றபோது கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாமல் போனது. அவர்கள் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதால் விடுபட்ட மாணவ, மாணவியருக்கு தேர்வு நடத்த முடியாக சூழ்நிலை உள்ளது. இதன்காரணமாகவே பிளஸ் 2 தேர்வு முடிவை அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *