குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. குடும்பத்தின் தலைவர் ஒரு பெண்ணாக இருந்தால் மட்டுமே மாதந்தோறும் உதவி கிடைக்கும் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். பலர் ரேஷன் அட்டைகளில் பெண் குடும்ப உறுப்பினரை தலைவராக மாற்ற முயற்சித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் நோக்கம் இல்லத்தரசிகளுக்கு நிதியுதவியை வழங்குவது மட்டுமே. எனவே குடும்ப தலைவரின் பெயரை மாற்ற தேவையில்லை. தகுதிவாய்ந்த குடும்பங்கள் கண்டறியப்பட்டு, இந்த திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.