பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர் முக்கியம் என்று பள்ளிக் கல்வித் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன் தலைமை வகித்தார்.
“ஆன்லைன் வகுப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் பார்வைத்திறன், கண் ஆரோக்கியத்தை அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பைவிட மாணவர்களின் உயிர் முக்கியம். இது பள்ளிகளை திறப்பதற்கான நேரம் கிடையாது.
சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவு எடுப்பார்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.