பள்ளிகளை திறப்பது தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நடைமுறைகளுடன் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
“பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை. அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் கலந்தாலோசித்த பிறகு உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பார். நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை டிசம்பரில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.