இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்னும் திற்ககப்படவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இதுபோல வகுப்புகள் திறக்கப்படுமா என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர்.
“தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை. நீட் தேர்வில் தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்தியாவே வியக்கும் அளவுக்கு அரசின் புதிய பாடத்திட்டம் அமைந்துள்ளது” என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.