பள்ளிகள் திறப்பு குறித்து 12-ம் தேதி முடிவு

பள்ளிகள் திறப்பு குறித்து 12-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பெறப்பட்ட தகவல்கள் தமிழக கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நவம்பர் 12-ம் தேதி முதல்வர் பழனிசாமி இறுதி முடிவினை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *