பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? வதந்திகளுக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி

தமிழகத்தில் வரும் நவம்பரில் பள்ளிகள் தொடங்கும் என்று சமூக வலைதங்களில் தகவல்கள் பரவின. இதனை அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டர் வாயிலாக மறுத்துள்ளார்.


“தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பில்லை. அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்த பிறகு மக்களின் கருத்துகள் கேட்டறியப்பட்டு அதன் பிறகே பள்ளிகள் திறக்கப்படும்.

சூழ்நிலை சரியானவுடன் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *