ஆகஸ்ட் 3-ல் பள்ளிகள் திறப்பா? தமிழக அரசு திட்டவட்ட மறுப்பு

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அந்த வரிசையில், அரசு பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. சில ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டன. இதனை பள்ளிக் கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.


“பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்து, அதன் அடிப்படையிலேயே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *