கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
“வெளிநாடுகளின் திரையரங்குகளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அந்த நடைமுறையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த முடியாது. இப்போதைய நிலையில் திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை. சூழ்நிலையை பொறுத்து முதல்வர் முடிவு செய்வார்” என்று அமைச்சர் பதிலளித்தார்.