ஆகஸ்ட் 1 முதல் பஸ்கள் இயக்கப்படுமா?

தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா, விலக்கிக் கொள்வதா என்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து மருத்துவத் துறை நிபுணர்களுடன் முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பஸ்களை இயக்க தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் விவாதிக்க உள்ளார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பஸ்களை இயக்கலாமா அல்லது தொடர்ந்து தடை விதிக்கலாமா, பகுதியளவு போக்குவரத்தை தொடங்கலாமா என்பது குறித்து ஓரிரு நாட்களில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *