‘வாட்ஸ்அப்; பூட்டிய வீட்டுக்குள் மகன்’ – திருவள்ளூரில் இளம்பெண் கொலையில் திடீர் திருப்பம்

திருவள்ளூரில் நீச்சல் குளத்தில் மூழ்கடித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை வாட்ஸ்அப் தகவலால் துப்பு துலங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை

திருவள்ளூர் மாவட்டம், பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தாணிபூண்டி, வாணியமல்லி பகுதியில் உள்ள நாய் பண்ணையில் பிரியங்கா (36) என்ற இளம்பெண்ணின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் மெல்வின் என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தன் உத்தரவின்பேரில் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் பிரியங்கா கொலை குறித்து மெல்வினிடம் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரியங்காவின் சொந்த ஊர் தெலங்கானா மாநிலம் செகந்திரபாத். பிரியங்காவின் கணவர் சீனிவாஸ். இந்தத் தம்பதியினருக்கு பிருத்வி (12) என்ற மகன் உள்ளார்.

பிரியங்காவுக்கும் சீனிவாஸிக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரியங்கா தன்னுடைய மகனுடன் தாணிபூண்டிக்கு குடிபெயர்ந்தார்.

அங்குள்ள நாய் பண்ணையில் அவர் வேலைப்பார்த்தார். இந்தச் சமயத்தில்தான் பிரியங்கா திடீரென காணாமல் போனார்.

இதுகுறித்து பிரியங்காவின் அண்ணன் விக்ரம், ஆன்லைன் மூலம் திருவள்ளூர் எஸ்.பி அரவிந்தனுக்கு புகாரளித்தார்.

கொலை செய்யப்பட்டபிரியங்கா புதைக்கப்பட்ட இடம்
கொலை செய்யப்பட்டபிரியங்கா புதைக்கப்பட்ட இடம்

வாட்ஸ்அப்

அந்தப் புகாரில் சில முக்கிய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். டோமினிக் என்பவர் என்னிடம் போனில் பேசி பிரியங்கா குறித்தும் பிருத்வி குறித்தும் தகவல்களைத் தெரிவித்தார். வாட்ஸ்அப் மூலம் சில செசேஜ்களை அனுப்பியிருந்தார்.

பிரியங்கா வீட்டில் இல்லை என்றும் பூட்டிய வீட்டுக்குள் பிருத்வி இருப்பதாகவும் அந்த செசேஜ்ஜில் குறிப்பிட்டிருந்தார். மேலும் பிரியங்கா, 20 லட்சம் ரூபாயும் எஸ்கேப் ஆகிவிட்டதாக சொல்லியிருந்தார்.

இந்தத் தகவல்களால் பிரியங்கா உயிரோடு இருக்கிறதா என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டுள்ளது அதனால் டோமினிக்கிடம் பிருத்வியை விமானம் மூலம் தெலங்கானாவுக்கு அனுப்பி வைக்கும்படி உதவி கேட்டேன்.

விமான டிக்கெட்களையும் முன்பதிவு செய்து கொடுத்தேன். அதன்படி பிருத்வியை விமான அழைத்துக் கொண்டு டோமினிக் தெலங்கானா வந்து என்னிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு அவர் சென்னை திரும்பிவிட்டார்.

வாட்ஸ்அப்
வாட்ஸ்அப்

இந்தநிலையில் விஜய் என்பவர் என்னிடம் போனில் பேசினார். அப்போது பிரியங்கா காணவில்லை என்று கூறினார்.

இதற்கிடையில் டோமினிக், பிரியங்காவை விஜய், மெல்வின், நாயர் ஆகியோர் கொலை செய்துவிட்டதாக இன்னொரு அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார்.

எனவே என் தங்கையை கண்டுபிடித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று விக்ரம் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நாய் பண்ணை

அதன்பேரில் பாதிரிவேடு போலீஸார் விசாரித்தபோது பிரியங்கா, நாய் பண்ணை அருகே புதைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரின் சடலத்தை போலீஸார் மீட்டனர். பிரியங்கா கொலை தொடர்பாக மெல்வினை போலீஸார் கைது செய்தனர்.

அவர் அளித்த தகவலில் பிரியங்காவுக்கும் நாய் பண்ணை அருகே வசிக்கும் விஜய் ஆனந்த்துக்கும் பழக்கம் இருந்தது. சில தினங்களுக்கு முன் விஜய் ஆனந்த் வீட்டுக்கு பிரியங்கா வந்தார்.

அப்போது பிரியங்காவிடம் விஜய் தவறாக நடக்க முயன்றார். அப்போது நடந்த மோதலில் நீச்சல் குளத்தில் மூழ்கி பிரியங்கா உயிரிழந்தார்.

அவரின் சடலத்தை விஜய்ஆனந்த், நாயர், நான் ஆகியோர் நாய் பண்ணை அருகே குழிதோண்டி புதைத்து விட்டு தப்பிவிட்டோம். ஆனால் போலீஸார் என்னை பிடித்துவிட்டனர் என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

மெல்வினின் தகவலின்படி பிரியங்கா கொலையில் துப்பு துலங்கியுள்ளது. இதையடுத்து விஜய்ஆனந்த், நாயரை போலீஸார் தேடிவருகின்றனர்.

அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீச்சல் குளத்தில் இளம்பெண் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *