கொரோனாவை அழிக்க.. வாஷிங் மெஷினில் 14 லட்ச ரூபாயை சலவை செய்த பெண் !

கடந்த பிப்ரவரியில் தென்கொரியாவில் வைரஸ் தொற்று அதிகமாக இருந்தது. அந்த நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை உணர்வு மிகவும் அதிகம். அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் கண்டிப்புடன் கடைப்பிடித்தனர். இதன்காரணமாக 14 ஆயிரம் வைரஸ் தொற்றுகளுடன் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.


சில மாதங்களுக்கு முன்பு அந்த நாட்டில் நாடாளுமன்ற தேர்தல்கூட வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு லட்சக்கணக்கான கொரோனா பரிசோதனை கருவிகளை தென்கொரியா சுடச்சுட அனுப்பி வருகிறது.

வாஷிங் மிஷில் சலவை செய்யப்பட்டு பீஸ் பீஸான ரூபாய் நோட்டுகள்.
வாஷிங் மிஷினில் சலவை செய்யப்பட்டு பீஸ் பீஸான ரூபாய் நோட்டுகள்.


கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் தென்கொரிய மக்களின் அதிதீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
தென்கொரிய தலைநகர் சியோல் புறநகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண், பிய்ந்துபோன ரூபாய் நோட்டுகளுடன் அந்த நாட்டு மத்திய வங்கியை அண்மையில் அணுகினார்.

அவர் கொண்டு வந்த பையில் பிய்ந்து பீஸ் பீஸான நோட்டுகள் நிறைந்திருந்தன.
என்ன பிரச்சினை என்று மத்திய வங்கி அதிகாரிகள் கேட்டபோது, அந்த பெண் கண்ணீருடன் தனது கதையை கூறினார். கொரோனா வைரஸ் பரவியபோது, ரூபாய் நோட்டுகள் மூலமாக வைரஸ் தொற்று பரவும் என்று கேள்விப்பட்டேன்.

எனவே வீட்டில் இருந்த ரூபாய் நோட்டுகளை சோப்பு போட்டு சுத்தம் செய்ய முடிவு செய்தேன்.
சுமார் 14 லட்ச ரூபாய் நோட்டுகளை வாஷிங் மிஷினில் போட்டு சோப்பு கலவையில் முழுமையாக சுத்தம் செய்தேன். ஆனால் வாஷிங் மிஷின் சுற்றிய வேகத்தில் ரூபாய் நோட்டுகள் நனைந்து பிய்ந்து, பீஸ் பீஸாகிவிட்டன என்று கண்ணீருடன் கூறினார்.

மைக்ரோவோவனில் சூடு செய்யப்பட்டு கருகிய ரூபாய் நோட்டுகள்.
மைக்ரோவோவனில் சூடு செய்யப்பட்டு கருகிய ரூபாய் நோட்டுகள்.


அந்த பெண்ணின் அறியாமையை அறிந்து பரிதாபப்பட்ட மத்திய வங்கி அதிகாரிகள், அவர் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கினர். அவர் கொண்டு வந்த கிழிந்த நோட்டுகளுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டது. அந்த வகையில் அப் பெண்ணுக்கு பாதியளவே பணம் திரும்ப கிடைத்ததாகக் கூறப்படுகிறது.


இதற்கு முன்பு தென்கொரிய இளைஞர் ஒருவர், கொரோனா வைரஸை அழிக்க மைக்ரோவேவ் ஓவனில் வைத்து ரூபாய் நோட்டுகளை சூடு செய்துள்ளார். இதில் அந்த நோட்டுகள் கருகி எரிந்து விட்டன. எனினும் அது மிகச் சிறிய தொகை. அவர் கொண்டு வந்த எரிந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கிவிட்டோம் என்று மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


வாஷிங்மிஷனில் பீஸ் பீஸான ரூபாய் நோட்டுகள், மைக்ரோவேவ் ஓவனில் கருகிய ரூபாய் நோட்டுகளின் புகைப்படங்களை தென்கொரிய மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
இன்னும் எத்தனை பேர் எந்த நிலையில் ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவார்களோ என்று மத்திய வங்கி அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *