சாலையில் கெத்து காட்டிய ‘பைக் ராணிக்கு’ 20,500 அம்போ..

கேரளாவின் கொல்லம் மாவட்டம் புந்தலத்தளம் சாலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் மோட்டார் சைக்கிளில் ஹாயாக பறந்தார். அவரது நண்பர்கள், அந்த பைக் ராணியின் சாகசத்தை வீடியோ எடுத்தனர். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.


இதை பார்த்து உச்சு கொட்டிய சிலர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துப்பு கொடுத்தனர். பைக் ராணி யார் என்பதை ஆர்.டி.ஓ. மகேஷ் விசாரித்து பைக் ராணியை பிடித்தனர்.
அவரிடம் கியர் இல்லாத பைக்கை ஓட்டுவதற்கான லைசென்ஸ் மட்டுமே இருந்தது. கியர் பைக்கை ஓட்டியதற்காக அந்த பெண்ணின் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது.


மேலும் சட்டவிதிகளை மீறி பைக்கில் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதற்காக பைக் ராணிக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கியர் பைக்கை ஓட்டியதற்காக 10 ஆயிரம் அபராதம், ஹெல்மெட் அணியாததற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒட்டுமொத்தமாக பைக் ராணியிடம் இருந்து 20 ஆயிரத்து 500 அபராதம் வசூல் செய்யப்பட்டது. கொல்லம் பைக் ராணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது. அதில் அவரது பைக் சாகசங்கள் நிறைந்து கிடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *