எங்கள வீட்டுக்கு விட்டுருங்க; கொடுமைப்படுத்துகிறாங்க – ஈரோடு கொரோனா வார்டு பரிதாபங்கள் #Viral video

எங்களை வீட்டுக்கு விட்டுருங்க, சாப்பாடு, தண்ணீர் கொடுக்காமல் கொடுமைப்படுத்துகிறாங்க என்று ஈரோடு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ஈரோடு கொரோனா வார்டு

“நான் ஈரோடு பெருந்துறை ஜிஹெச், அதாவது மெடிக்கல் காலேஜ்ஜிலிருந்து பேசுகிறேன். இங்கு எங்களை தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். சரியான நேரத்துக்கு மருத்துவ வசதி, சாப்பாடு, பால் கிடைப்பதில்லை. நான் ஒன்றரை வயது கைக்குழந்தை வைத்துள்ளேன். எனக்கு நேத்து நைட் சாப்பாடு பத்தாமல்தான் கொடுத்தார்கள். கைக்குழந்தைக்கு பால்கூட கொடுக்கல. மணி 8 மணியாகுகிறது. இன்னமும் கொடுக்கவில்லை.


சிகிச்சை இன்னும் பெட்டராக இருந்தால் நல்லா இருக்கும். எங்களை எதுவுமே கண்டுக்க மாட்டுக்கிறார்கள். எங்க வீட்டுக்காரர் உடம்பு சரியில்லாமல் இருக்கிறார்கள். டோரை வெளியில் பூட்டியிருக்கிறார்கள். நானும் தட்டி தட்டி பார்க்கிறேன் ஆனால் கதவை திறக்கவில்லை” என்று கூறும் அந்தப் பெண், அதே வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள இன்னொரு பெண்ணிடம் அங்குள்ள நிலைமையைச் சொல்லும்படி தெரிவிக்கிறார். அக்கா சொல்லுங்க அக்கா

வீட்டுக்கு விட்டுருங்க

பெட்டில் அமர்ந்திருந்த இன்னொரு பெண், “மூன்று நாளா எங்களை படுத்திற கொமைப்படுத்துகிறார்கள். நல்ல தண்ணீருக்கு நாங்கள் ரொம்பவே சிரமப்படுகிறோம். குளோரின் கலந்த தண்ணீரை நான் குடிக்கவே மாட்டேன். அதைக் குடிப்பதால் தொண்டை எரியுது. தண்ணீருக்காக வெளியில் சென்றால் எங்களை அந்தப்பக்கம் செல்லும்படி சொல்கிறார்கள். நேத்து காலையிலே சாப்பாடு வர பத்துமணியாகிவிட்டது.


இத்தனைக்கும் நான் உடம்பு சரியில்லாதவர். என் வீட்டுக்காரர் சுகர் நோயாளி. எங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் அங்கு சென்று பாதுகாப்பாக இருப்போம். வீட்டில் எல்லா வசதியும் இருக்கிறது. ஒரு மாசத்துக்குகூட வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துகொள்கிறோம்.

எனக்கும் என் கணவருக்கும் நெகட்டிவ் என ரிசல்ட்ன்ணு வந்துவிட்டது. அதனால் எங்களை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். மனதளவில் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளோம் ஊர்ல இருந்து தண்ணீர் கொண்டு வரச்சொல்றாங்க. யாருங்க எங்களுக்கு பொருள் வந்து கொடுப்பார்கள்” என்று கூறுகிறார்.

வீடியோ


அந்தப் பெண்ணின் கணவர், நான் சுகர் நோயாளி. இங்கு வந்து 3 நாளாகிறது. எந்த டாக்டரும் வந்து பார்க்கல. வீட்டுக்கு அனுப்பி விடுங்க. இப்படி பண்ணுகிறார்கள், என்ன செய்வது என்று கூறுகிறார்.
ஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகள் ரொம்பவே கஷ்டப்படுகிறார்கள் சீக்கிரமா முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் ப்ளீஸ் சார் என்பதோடு வீடியோ முடிவடைகிறது.


இதுகுறித்து ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டபோது, இந்த பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றனர். ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து அதே பெண் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நான் ஏற்கெனவே பதிவு செய்த வீடியோவை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு அரசுக்கும் முதல்வருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்களது கோிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள். மருந்து முதல் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *