கொரோனாவுக்கு இதுவரை 12 லட்சம் பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு இதுவரை 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 கோடியே 69 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 3 கோடியே 28 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் இதுவரை கரோனா வைரஸால் 12 லட்சத்து 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 2.36 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்து இந்தியாவில் 1.22 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 1.6 லட்சம் பேர்,மெக்ஸிகோவில் 91,895 பேர் , பிரிட்டனில் 46,717 பேர்,  பிரான்ஸில் 37,019 பேர்,  ஸ்பெயினில் 35,878 பேர், கம்போடியாவில் 31,515 பேர்,   அர்ஜென்டினாவில் 31,140 பேர், ரஷ்யாவில் 28,473 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் மீண்டும் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *