உலகம் முழுவதும் ஒரு கோடியே 39 ஆயிரத்து 83 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேரை கொரோனா தொற்றுகிறது. பிரேசில், இந்தியாவில் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது.
உலகளாவிய கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 37 nட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 118 பேர் உயிரிழந்தனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 20 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 76 ஆயிரத்து 822 பேர் உயிர்பலியாகியுள்ளனர்.
3-வது இடத்தில் உள்ள இந்தியாவில் வைரஸ் பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியுள்ளது. 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் 7.5 லட்சம் பேர், பெருவில் 3.41 லட்சம் பேர், தென் ஆப்பிரிக்காவில் 3.24 லட்சம் பேர், மெக்ஸிகோவில் 3.24 லட்சம் பேர், சிலியில் 3.23 லட்சம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 39 லட்சத்து 83 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 83 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 5 லட்சத்து 93 ஆயிரத்து 482 பேர் உயிரிழந்துள்ளனர்.