உலகளாவிய கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாள்தோறும் சராசரியாக 50 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படுகிறது.
இப்போதைய நிலையில் அமெரிக்காவில் 52 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

இதில் 27 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 23.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தென்அமெரிக்க நாடான பிரேசிலில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படுகிறது.
அந்த நாட்டில் 30 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 21 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 7 லட்சத்து 91 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 22 லட்சம் பேர், ரஷ்யாவில் 8.92 லட்சம் பேர், தென்கொரியாவில் 5.63 லட்சம் பேர், மெக்ஸிகோவில் 4.83 லட்சம் பேர், பெருவில் 4.83 லட்சம் பேர், கொலம்பியாவில் 3.97 லட்சம் பேர், சிலியில் 3.75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கோடியே 31 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 956 பேர் உயிரிழந்துள்ளனர்.