உலகளாவிய அளவில் ஒரு கோடியே 34 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றிய அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 35 லட்சத்து 45 ஆயிரத்து 254 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 145 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்அமெரிக்க நாடான பிரேசில் 2-வது இடத்தில் உள்ளது. அங்கு 19 லட்சத்து 31 ஆயிரத்து 204 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 74 ஆயிரத்து 242 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 9 லட்சத்து 36 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 ஆயிரத்து 309 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் 7 லட்சத்து 39 ஆயிரம் பேரும், பெரு நாட்டில் 3 லட்சத்து 33 ஆயிரம் பேரும், சிலியில் 3 லட்சத்து 19 ஆயிரம் பேரும், மெக்ஸிகோவில் 3 லட்சத்து 11 ஆயிரம் பேரும், ஸ்பெயினில் 3 லட்சத்து 3 ஆயிரம் பேரும், தென்ஆப்பிரிக்காவில் 2 லட்சத்து 98 ஆயிரம் பேரும் பிரிட்டனில் 2 லட்சத்து 91 ஆயிரம் பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா மற்றும் பிரேசில், பெரு, சிலி உள்ளிட்டதென் அமெரிக்க நாடுகளில் வைரஸ் தொற்று காட்டுத்தீயாக பரவி வருகிறது. போதிய அடிப்படை வசதிகள் அற்ற ஆப்பிரிக்க கண்டத்திலும் வைரஸ் தொற்று வேகமெடுத்துள்ளது கவலையளிக்கிறது.