கொரோனாவுக்கு முதல் தடுப்பூசி.. ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு…

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவின் மாடர்னா, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆகியவை மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன.


இந்தியாவில் 14 நிறுவனங்கள் மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்ஸின் என்ற பெயரில் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளது.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண் தன்னார்வலர்.
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண் தன்னார்வலர்.


இதேபோலகுஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ் கேடில்லா நிறுவனம் ஜைகோவ்-டி என்ற பெயரில் மருந்து தயார் செய்துள்ளது. இரு நிறுவனங்களும் தங்களது மருந்துகளை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தி வருகின்றன.


இந்த பின்னணியில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த காமாலேயா இன்ஸ்டிடியூட் நிறுவனம் கொரோனாவுக்கு புதிய மருந்தை கண்டுபிடித்து மனிதர்களிடம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த மருந்தை வர்த்தகரீதியாக விற்பனை செய்ய ரஷ்ய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.


இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
“உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்தை எனது மகளுக்கே கொடுத்துள்ளேன். அவர் பூரண குணமடைந்துவிட்டார்” என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்.
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சியில் பங்கேற்ற பெண்.


ரஷ்ய துணை பிரதமர் டாட்யானா கூறும்போது, “முதலில் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவோம். அதன்பிறகு வரும் ஜனவரி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்” என்று தெரிவித்தார்.


கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தாலும் அடுத்த ஆண்டே அந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அரசு தரப்பு கூறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. ரஷ்ய மருந்தை பயன்படுத்த மாட்டோம் என்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *