அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் ரென்டென்கோர்லு (வயது 29). மங்கலோலியாவை பூர்விகமாக கொண்ட இவர் 6.9 அடி உயரம் உடையவர்.
உலகின் மிக உயரமான 2-வது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதோடு உலகின் மிக நீளமான கால்களை கொண்ட பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்காரி. இவரது காலின் நீளம் 52.8 அங்குலம் ஆகும்.
இவரது குடும்பத்தில் அனைவருமே உயரமானவர்கள். இவரது தந்தை 6 அடி 10 அங்குலம் உயரமும் தாய் 6 அடி ஒரு அங்குலம் உயரமும் கொண்டவர்கள்.
சிறு வயதில் தனது உயரம் குறித்து கவலைப்பட்ட ரென்டென்கோர்லு இப்போது பெருமையாக கருதுகிறார்.
அவர் கூறும்போது, “எங்கு சென்றாலும் தலைதட்டும். எனது உயரத்துக்கு ஏற்ற உடைகள் கிடைப்பது கடினம். சிறு வயதிலேயே எனது உயரமும் ஆசிரியரும் உயரமும் ஒரே மாதிரியாக இருக்கும். இப்போது எங்கு சென்றாலும் கூட்டம் கூடி விடும். செல்பி எடுப்பார்கள். நான் ராணியாகிவிட்டேன்” என்றார்.