உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்.. கட்டுமானப் பணிகள் விறுவிறு..2022-ல் ரயில் ஓடும்…

உலகின் மிக உயரமாந செனால் ரயில் பாலம் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. வரும் 2022-ம் ஆண்டில் இந்த பாலத்தில் ரயில் ஓடும்.


காஷ்மீரின் பக்கால், காரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதித் தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ல் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதன்பின் கடந்த 2010-ல் மீண்டும் பாலம் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்படைந்திருக்கிறது.
இதுகுறித்து ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ” 1.3 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலத்தின் உயரம் 359 மீட்டராகும். இதுதான் உலகத்தின் மிக உயரமான ரயில்வே பாலம் ஆகும்.

கடந்த ஓராண்டாக பாலம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வரும் 2022-ம் ஆண்டில் பாலத்தில் ரயில் தடதடத்து ஓடும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *