கடந்த மே மாத தொடக்கத்தில் லடாக் எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.
கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 40 பேர் பலியாகினர்.
சீனாவுடன் போர் பதற்றம் எழுந்ததை தொடர்ந்து டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு சீன செயலிகள் புதிய பெயரில் முளைத்தன.
இந்நிலையில் சீன நிறுவனமான ஜியோமியின் எம்.ஐ. பிரவுசர், பாய்டு சர்ஜ்ஸ் உள்ளிட்ட 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.