பெண் எம்.பி.யின் இடுப்பில் கை வைத்தாரா முதல்வர் எடியூரப்பா!

பெண் எம்.பி.யின் இடுப்பில் கை வைத்தாரா முதல்வர் எடியூரப்பா என்று சமூக வலைதளத்தில் ஓங்கி உரக்க குரல் எழுப்பப்படுகிறது.

கர்நாடக காங்கிரஸின் மூத்த தலைவராக இருந்த நடிகர் அம்பரீஷ், அந்த மாநிலத்தின் மண்டியா தொகுதி எம்.பி.யாக பதவி வகித்தார். கடந்த 2018 நவம்பர் 24-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

நடிகை சுமலதா எம்.பி.யான கதை

இதன்பின் கடந்த 2019 மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா, மண்டியா தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் காங்கிரஸ் தரப்பில் சுமலதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டன.

கேஆர்எஸ் அணையில் பூக்களை தூவிய முதல்வர் எடியூரப்பா.
கேஆர்எஸ் அணையில் பூக்களை தூவிய முதல்வர் எடியூரப்பா.

இதில் மண்டியா தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் அப்போதைய முதல்வர் குமார சாமியின் மகன் நிகில் களமிறக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சுமலதா சுயேச்சையாக மண்டியா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். அவருக்கு பாஜக மறைமுகமாக ஆதரவு வழங்கியது.

அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை நிறுத்தவில்லை. இறுதியில் சுமலதா அமோக வெற்றி பெற்று எம்.பி.யானார். தேர்தலுக்குப் பிறகு பாஜகவின் ஆதரவாளராக சுமலதா செயல்பட்டு வருகிறார்.

கேஆர்எஸ் அணை பூஜை

இதன்பிறகு கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி கவிழ்ந்து கடந்த 2019 ஜூலை 26-ம் தேதி பாஜக ஆட்சி பதவியேற்றது. பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா மாநில முதல்வராக பதவி வகிக்கிறார்.

கேஆர்எஸ் அணையில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற எடியூரப்பா.
கேஆர்எஸ் அணையில் நடைபெற்ற பூஜையில் பங்கேற்ற எடியூரப்பா.

மண்டியா தொகுதியில் அமைந்துள்ள கிருஷ்ண ராஜ சாகர் (கேஆர்எஸ்) அணை அண்மையில் முழுமையாக நிரம்பியது. இதைத் தொடர்ந்து கேஆர்எஸ் அணையில் நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் முதல்வர் எடியூரப்பா பங்கேற்று காவிரி தாய்க்கு பூஜை செய்தார். இதில் நடிகை சுமலதா எம்.பி.யும் பங்கேற்றார். வழக்கமான பூஜைகளுக்குப் பிறகு முதல்வர் எடியூரப்பா அணையில் பூக்களை தூவி பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டார்.

இடுப்பில் கை வைத்தாரா?

இந்த விழாவின்போது நடிகை சுமலதா எம்.பி.யின் இடுப்பில் முதல்வர் எடியூரப்பா கை வைத்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அணை நீருக்கு சுமலதா பூக்களை தூவியபோது அவரது இடுப்பில் எடியூரப்பா கை வைப்பது போல வீடியோவில் காட்சிகள் பதிவாகி உள்ளன. அப்போது சுமலதா, எடியூரப்பாவிடம் ஏதோ பேசுகிறார்.

அவர் கோபத்தில் பேசுவதாக சமூக வலைதள பதிவுகளில் கூறப்பட்டுள்ளது.

உண்மையில் சுமலதா கோபத்தில் பேசினாரா, முதல்வரும் அவரும் என்ன பேசினார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. கர்நாடகா மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *