பெண் தவளைக்கு காதல் தூதுவிட மஞ்சளாக மாறும் ஆண் தவளைகள் – வைரலாக பரவும் வீடியோ

தவளைகளில் பல்வேறு வகைகள் உள்ளன. இதில் ஒரு வகை புல்பிராக். இந்த வகை தவளைகளின் காதுகள் பெரிதாக இருக்கும். இவை எழுப்பும் சப்தம் காளையின் குரல் போல இருக்கும். இதன்காரணமாகவே இவை புல் பிராக் (காளை தவளை) என்று அழைக்கப்படுகின்றன.


பொதுவாக புல் பிராக் தவளைகள் ஆலிவ் பச்சை வண்ணத்தில் காணப்படும். இனப்பெருக்கத்தில் ஈடுபடும்போது மட்டும் பெண் தவளைகளை கவர்ந்திழுக்க ஆண் தவளைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.


ஒடிசாவின் நார்சிக்பூரில் ஏராளமான புல்பிராக் தவளைகள் மஞ்சளாக நிறம் மாறி இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை வனத்துறையின் ஐஎப்எஸ் அதிகாரி பிரவீண் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *