டெல்லியில் மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சில நாட்களுக்கு முன்பு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
டெல்லி அருகே ஹரியாணா மாநிலத்தில் அமைந்துள்ள குருகிராமில் மேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தன்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் குருகிராம் மேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.