காளீஸ்வரி அறக்கட்டளையின் சார்பில் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற இளங்கலை, முதுகலை படிக்கும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.
பொருளாதாரரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு மட்டுமே கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதன்படி கல்வி கட்டணத்தில் 75 சதவீதம் வரை அறக்கட்டளை வழங்கும். விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யவும், மேலும் விவரங்களை அறிந்து கொள்ளவும் https://gngascholarship.kaleesuwari.com/ இணையதளத்தை பார்வையிடலாம்.