யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அந்த யூ டியூப் சேனலை தடை செய்ய வேண்டும். பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக உட்பட பல்வேறு தரப்பினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.
இதுதொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அவதூறு வீடியோவை வெளியிட்டதாக சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன் (49) கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரமை நடத்தப்படுகிறது.